விருதுநகர் அருகே வாகன விபத்தில் தொழிலாளி சாவு
விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி சாலைப் பகுதியில் உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகன் செந்தில்குமார்(27). இப்பகுதியில் லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து


விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி சாலைப் பகுதியில் உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகன் செந்தில்குமார்(27). இப்பகுதியில் லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் செவ்வாய்கிழமை மாலையில் அல்லம்பட்டியிலிருந்து பாலவநத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அல்லம்பட்டி முக்குரோட்டில் செல்லும் போது இவரது இருச்சக்கர வாகனம் மீது அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் செந்தில்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து சென்னல்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமியை கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...