2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 30ம் தேதி(வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:31 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 30ம் தேதி(வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள  செய்தி:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு முகமையின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தரும் வகையில் விருதுநகர் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 2 மணி வரையில் நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். அதனால் இம்மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். 

இம்முகாமில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அன்றைய தினமே பணிக்கான உத்தரவும் அளிக்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பலர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அதனால் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.