நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 1.64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)5 வயதிற்குள்பட்ட 1.64 லட்சம் குழந்தைகளுக்கு 1068 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:26 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)5 வயதிற்குள்பட்ட 1.64 லட்சம் குழந்தைகளுக்கு 1068 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
   
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:1 வயது குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்டவர்கள் போலியோவால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி சுகாதார  மாவட்டங்களில் 1068 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 487 மையங்களில் 61 ஆயிரத்து 333 குழந்தைகளுக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 581 மையங்கள் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 17 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், ஊட்டச்த்து மையம், பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 5 மணி வரையில் வழங்கப்பட இருக்கிறது.

இப்பணியில் மொத்தம் 4452 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 31 நடமாடும் குழுக்கள் அமைத்து அகதிகள் முகாம், நரிக்குறவர்கள், தாற்காலிகமாக குடிசைகளில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சொட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழா நடைபெறும் இடங்கள், திருமண அரங்குகளில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 41 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ இல்லாத உலகம் படைக்க இம்முகாமை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.