வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரம்: செங்கரும்பு விலை அதிகம்

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக பஜார் பகுதியில் குவிந்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:25 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக பஜார் பகுதியில் குவிந்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் கண்காணிக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை நகரம் முதல் கிராமங்கள் வரையில் உள்ளவர்கள் சிறப்பாக கொண்டாடுவர். இத்திருவிழா வியாழக்கிழமை தொடங்கி, சனிக்கிழமை வரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு புது மணத்தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வாங்குவதற்காக கிராமங்களில் இருந்து பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். இவ்விழா பொருள்களான செங்கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் கிழங்கு கொத்து, தேங்காய், வாழைப்பழம், பூமாலைகள், மண்பாண்டம் மற்றும் பலசரக்குகள் விற்பனை செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதுவதால் வியாபாரமும் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல், தை மாதச் சீர்வரிசை பொருள்கள் வழங்குவதற்காக பெற்றோர்களுடன் புதுமணத் தம்பதிகளும் ஜவுளிக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.

இது தொடர்பாக குந்தலப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தநாதன் என்பவர் கூறுகையில், செங்கரும்பு, பூமாலைகள், தேங்காய், வாழைத்தார் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் நடையனேரி, எரிச்சநத்தம், கோபிநாயக்கன்பட்டி, செங்கமலநாச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்பு பயிரிடப்பட்டு விற்பனைக்கு வரும். அப்போது, விலை குறைவாகவும் கிடைத்தது. ஆனால், பயிரிடும் பருவத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தால் பயிரிடவில்லை. அதேபோல் மஞ்சள் கிழங்கு கொத்தின் விலையும் ரூ.20 லிருந்து ரூ.40 ஆக உயர்திருப்பதாக தெரிவித்தார்.

விருதுநகர் கரும்பு வியாபாரி காரிச்சாமி கூறுகையில், விருதுநகர் பகுதியில் இம்முறை செங்கரும்பு பயிரிடப்படவில்லை. அதனால், இம்முறை தேனி மாவட்டம் சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் மேலூர் பகுதிகளில் இருந்து செங்கரும்பு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். அதனால், கரும்பு வெட்டு, ஏற்றுக் கூலி மற்றும் லாரி வாடகை கொடுத்து வாங்கி வந்து வந்து விற்கிறோம். தற்போது, வளர்ந்த நிலையில் 15 தட்டைகள் கொண்ட செங்கரும்பு கட்டின் ரூ.400 முதல் ரூ.450 வரையில் விற்பனை செய்கின்றனர். இதேபோல், கடந்தாண்டு ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரையில் விற்பனையானதாக தெரிவித்தார். 

ஜேப்படி திருடர்களை கண்காணிக்க கேமரா: தைப்பொங்கல் பொருள்கள் வாங்க வரும் கிராம மக்கள் பஜார் பகுதிகளில் குவிந்து வருகின்றனர். இதை தங்களுக்கு ஜாதகமாக பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் பிக்பாக்கெட் அடிப்பதை கண்காணிப்பதற்காக மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், தேசபந்து மைதானம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் துல்லியமாக கண்காணிக்கும் வகையிலான கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதோடு, ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.