விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகையில், 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். அதோடு, தேர்ச்சி சதவீதம் குறைந்த மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நவீன முறையில் பாடவாரியாக குறுந்தகடுகள் பள்ளிக் கல்வித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.