தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் 60 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் நிலத்தை பறிக்கும் அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரி செவ்வாய்கிழமை சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:24 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் நிலத்தை பறிக்கும் அவசர சட்டத்தை திரும்ப பெறக்கோரி செவ்வாய்கிழமை சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதில், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு ஒன்றியத் தலைவர் மங்கையர்க்கரசி தலைமையில் நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் விவசாயிகள் சங்கத்தை 9 பேரைச் கைது செய்தனர்.

இதேபோல், காரியாபட்டியில் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியத் தலைவர் அம்மாசி தலைமையில் நடந்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு வட்டாரச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 21 பேரையும் என மொத்தம் 60 பேரை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.