தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கடன் வாங்கிய பிரச்னையில் மனைவி உள்பட 3 பேர் மாயம் கணவர் புகார்

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் தேவராஜ் நிக்சன்(42). இவரது மனைவி மாரியம்மாள்(32). இந்நிலையில் மாரியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் திங்கள்கிழமை ரூ.80 ஆயிரம் கடன்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:24 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் கடன் வாங்கிய பிரச்னை தொடர்பாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாயமானதாக பாணடியன் நகர் காவல் நிலையத்தில் கணவர் புகார் செய்தார்.

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் தேவராஜ் நிக்சன்(42). இவரது மனைவி மாரியம்மாள்(32). இந்நிலையில் மாரியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் திங்கள்கிழமை ரூ.80 ஆயிரம் கடன் பெற்றாராம். இவ்வளவு கடன் ஏன் வாங்கினாய் எனக் கூறி மனைவியிடம் தேவராஜ் நிக்சன் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள், தனது மகள்களான பிரின்சி(11), காவ்யா(10) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது கணவரிடம் குறிப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றாராம்.

இதையடுத்து மனைவி குழந்தைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த தேவராஜ் நிக்சன் தாயார், மாமியார் மற்றும் உறவினர்களிடம் விசாரித்ததில் எங்கிருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் தேவராஜ் நிக்சன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளுடன் காணாமல் போன மாரியம்மாள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.