விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இக்குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் தன்னிச்சையாக வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளன. அவ்வாறு வழங்கும் மருந்தகங்களை ஆய்வு செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.