தமிழகத்தில் கட்டுமான பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் கட்டுமான தொழில் சரிவடையும் நிலையிருக்கிறது. ஒரே மாதத்திற்குள் சிமெண்ட் மூடை விலை ரூ.330 லிருந்து ரூ.380 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசின் கட்டுப்பாட்டு வாரியங்கள் தவறிவிட்டன. அதனால் உடனே சரி செய்வதற்கு தீர்வுக்குழுக்கள் அமைக்க வேண்டும். இதில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். அம்மா திட்டத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. மாநில அளவில் மாதத்தின் தேவை 68 லட்சம் மெட்ரிக் டன்னில், 34 லட்சம் மெட்ரிக் டன் பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், மீதமுள்ள 34 மெட்ரிக் டன் மட்டுமே நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகின்றனர்.