எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அடுத்துள்ள ஆணைப்பட்டியைச் சேர்ந்தவர் புலியூர் முருகேசன். இவர் தற்போது கரூர் அருகே உள்ள புலியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எல்ஐசி ஏஜெண்டான இவர் சிறு நாவல் புத்தகங்களை எழுதி வருகிறார். இவர் தான் எழுதிய புத்தகமான பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற சிறுகதை புத்தகத்தை கடந்த 28.12.2014-ல் கரூரில் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் என்ற தலைப்பில், திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்துக்கொண்டு எழுதியுள்ளார். இதனால் அந்த சமுதாயத்தினர் நூலை தடை செய்ய வேண்டும், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் 5 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதனால் முருகேசன் நூல் ஆபாசமாக இருத்தல்(292), புத்தகத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துதல் (153),எழுத்துக்கள் கலவரத்தை உருவாக்குதல் (504, 505) ஆகிய பிரிவுகளின் மேல் முருகேசன் மீது பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து வசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

