தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாய்ப்பேச இயலாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 9 ஆண்டு சிறை

திருவாரூர் அருகே வாய்ப்பேச இயலாத இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு திருவாரூர் நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

News image
Updated On :23 பிப்ரவரி 2015, 3:26 pm

திருவாரூர் அருகே வாய்ப்பேச இயலாத இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு திருவாரூர் நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வீரையன் மகன் ஓட்டுநர் வினோத் (25). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் காந்தி என்ப வரின் மகள் மனோகரி (23). வாய்ப்பேச இயலாத இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த மனோகரியை வினோத் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்து திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அன்புராஜ் குற்றஞ்சாட்டப்பட்ட வினோத்துக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 11,000 அபராதம் விதித்து தீர்ப் பளித்தார். இதையடுத்து வினோத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.