விருதுநகர் நகராட்சியில் பஜார் பகுதியில் விரைவில் சாலை அமைக்க கோரிக்கை
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களின் சார்பாக முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் நகராட்சி


விருதுநகர் நகராட்சி பஜாரில் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களின் சார்பாக முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் நகராட்சி பஜார் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகளுக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதற்காக சாலையில் ஆள்நுழைவு தொட்டிகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு நெருக்கடியாக இருக்கிறது. ஏற்கனவே இச்சாலையில் பள்ளி மாணவ, மாணவிகளும், கிராமத்திலிருந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வந்து செல்கிறார்கள்.
தற்போது, இச்சாலையில் சரிசமமாக இல்லாமல் இருப்பதால் வாகனத்தில் செல்கிறவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. அப்போது, திருக்கோயிலுக்கு விரதம் இருப்பவர்கள் தெப்பக்குளம் வரையில் வந்து வெறுங்காலுடன் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வார்கள். எனவே அதற்கு முன்னதாகவே இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...