2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிவகாசிஅருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி காயம்

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் கருந்திரிகளை துண்டாக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஆலையின் மேற்பார்வையாளரை கிழக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:09 am

எஸ். பாண்டியன்

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் கருந்திரிகளை துண்டாக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஆலையின் மேற்பார்வையாளரை கிழக்கு போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் காளியப்பன்(65) என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு  வழக்கம் போல் புதன்கிழமை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒர் அறையில் மாலை 3 மணிக்கு இதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(45) என்பவர் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, கருந்திரியில் ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், தொழிலாளி ராமமூர்த்தி படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஆலையின் மேற்பார்வையாளர் தங்கவேலை கைது செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.