2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர் பாத்திமாநகரில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். பின்னர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பாத்திமாநகரில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

விருதுநகர் நகராட்சியில் உள்ள 22-வது வார்டில் பாத்திமாநகர் 60 அடி சாலையில் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது, தூர்ந்து மேடாகி அதிகளவில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல், நகராட்சிப் பகுதியில் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் அமைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு இலவச குடிநீர் இணைப்பும் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. எனவே இதுவரையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதனால், இப்பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர் மற்றும் குடிமை மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கவும் உள்ளிட்ட பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் முருகன் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மோகன், உதவி பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இக்குறிப்பிட்ட பணிகளை செய்து கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.