மீண்டும் மழை! மிரண்ட தூத்துக்குடி!!
தூத்துக்குடி மாட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும், உரிய முன்னேற்பாடுகள் இருப்பாதக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும், உரிய முன்னேற்பாடுகள் இருப்பாதக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த மாதம் 23 ஆம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இந்த தண்ணீர் இன்னும் வடியாத நிலையில் காணப்படுகிறது.
இருப்பினும், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் வெயில் அடித்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், நேற்று இரவு முதல் தூத்துக்குடி புறநகர் பகுதிகளிலும், இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், மாநகரில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளன. வடிகால் வசதிகள் இல்லாததால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. இதேபோல, திருச்செந்தூர் பகுதியில் 68 மில்லி மீ்ட்டரும், வைகுண்டத்தில் 36 மில்லி மீட்டரும், சாத்தான்குளம் பகுதியில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மழை பெய்யவே வாய்ப்பு இல்லை எனக் கூறிவந்த வானிலை ஆய்வு மையம் தற்போது இன்றும் நாளையும் கனமழை இருக்கும் என அறிவித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. வானிலை மையம் உண்மையான நிலையை மக்களிடம் எடுத்துக் கூறினால்தான் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, இரண்டு நாள்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் ஏற்படும் போது அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும் என ஆட்சியர் ம. ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...