/

செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளம் விஞ்ஞானியாக பள்ளி மாணவர்களுக்கு  அழைப்பு

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:16 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் பி.சுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நிதி உதவியுடன் இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி திட்டம் மே.4-ம் தேதி முதல் தொடர்ந்து 15-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சியில் பங்கேற்பதற்கு அரசு பள்ளியில் நிகழாண்டில் 9-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியாக இருக்க வேண்டும். இதில், தேர்வு செய்யப்பட்டும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். இதற்கு பயிற்சி கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இதில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழலியல் மற்றும் உடற்கல்வியல் ஆகிய பாடங்களில் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான எஸ்.ராஜசிங்கை 9443167454 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.