/

தனியார் நிதி நிறுவனம்: முதலீட்டு தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி பி.ஏ.சி.எல் களப்பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:15 am

எஸ். பாண்டியன்

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி பி.ஏ.சி.எல் களப்பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை நேரில் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அசங்கத்தின் தலைவர் சி.பழனிச்சாமி ஆட்சியர் வே.ராஜாராமனிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: சமுதாயத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த எங்களுக்கு வேலை அளிப்பதாக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் செயல்பட்ட பி.எ.சி.எல் நிறுவனத்தின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வந்த அதிகாரிகள் எங்களை களப்பணியாளர்களாக நியமித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதோடு, புதிதாக களப்பணியாளர்களையும் சேர்த்தும் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 300 கிளைகளுக்கு மேல் கிட்டதட்ட 1 கோடி களப்பணியாளர்களையும், 5 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து படிக்காத, பட்டதாரி ஆண், பெண் என அனைவரும் களப்பணியாளர்களாக சேர்ந்தோம். இதில், விருதுநகர் மாவட்டத்தில் எங்கள் உறவினர், நண்பர்கள் என 2 லட்சம் பேரிடம் சேமிப்புத் திட்டம் மூலம் தவணை தொகை பெற்று நிறுவனத்தில் செலுத்தியும், முதிர்வு நாளில் முதலீடுகளை திரும்ப கொடுத்து வந்தோம். இந்நிலையில், கடந்த-2014ல் சிபிஐ நடவடிக்கையின் மூலம் நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இக்குறிப்பிட்ட நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோருக்கு பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆவேசம் அடைந்து களப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், சொத்துக்களை சேதப்படுத்தும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். நெருக்கடிக்கு ஆளான பெண் களப்பணியாளர்கள் மனரீதியாக பாதித்து தற்கொலை முயற்சி வரையில் சென்றுள்ளனர். அதனால் எங்களது பிரச்னையை பரிசீலனை செய்து உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு வலியுறுத்தி ஆட்சியரிடம் அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.