/

விருதுநகர் மாவட்டத்தில்திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த 60 ஊராட்சிகள் தேர்வு  

விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் 60 ஊராட்சிகளை தேர்வு செய்து குப்பைகளை அகற்றி சுகாதாரமாக மாற்றும் வகையில்  பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.    

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:14 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் 60 ஊராட்சிகளை தேர்வு செய்து குப்பைகளை அகற்றி சுகாதாரமாக மாற்றும் வகையில்  பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.       

ஒவ்வொரு ஊராட்சியையும் சுத்தமாகவும், சுகாதாரமாக்கும் மாற்றும் பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில்  மாநிலம் முழுவதும் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் முதல் கட்டமாக 2 ஆயிரம் ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.    

இதன் அடிப்படையில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட நகரப் பகுதி அருகே உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் சுற்றுலாதலம், புனித தலங்கள் உள்ள ஊராட்சிகள், பெரிய தொழிற்சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ள கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைப்பகுதியின் மேல் அமைந்திருக்கிற ஊராட்சிகளில் இத்திட்டம்  செயல்படுத்தப்பட இருக்கிறது.   

இம்மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராஜபாளையம் ஒன்றியத்தில் சொக்கநாதன்புத்தூர், தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், மேலபாட்டம்கரிசல்குளம், மேலகீழகுலராஜராமன், வடக்குதேவதானம், சம்சிகாபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்தில் அச்சம்தவிழ்த்தான், அத்திக்குளம், அத்திக்குளம் செங்குளம், படிக்காசுவைததான்பட்டி, திருவண்ணாமலை, விழுப்பனூர், பிள்ளையார்நத்தம், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம், மகராஜாபுரம், ராமசாமிபுரம், ரெங்கப்பன்நாயக்கன்பட்டி, சிவகாசி ஒன்றியத்தில் ஆனைக்குட்டம், ஆனையூர், அனுப்பங்குளம், காரிசேரி, பள்ளபட்டி, சாமிந்த்தம், செங்கமலநாச்சியார்புரம், சித்துராஜாபுரம், வேண்டுராயபுரம், விஸ்வநத்தம், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஒன்றியத்தில் சத்திரபட்டி, இருக்கன்குடி, படந்தால், வெங்கடாஜலபுரம், விருதுநகர் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, கூரைக்குண்டு, பாவாலி, ரோசல்பட்டி, சிவஞானபுரம், வச்சக்காரப்பட்டி, அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் ஆத்திபட்டி, கஞ்சமநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், பாலையம்பட்டி, பந்தல்குடி, சூலக்கரை, காரியாபட்டி ஒன்றியத்தில் ஆவியூர், டி,கடமங்கலம், கல்குறிச்சி, கம்பிக்குடி, தோனுகால், திருச்சுழி ஒன்றியத்தில் கீழக்கண்டமங்கலம், மண்டபசாலை, திருச்சுழி, நரிக்குடி ஒன்றித்தில் நரிக்குடி, வீரசோழன் ஆகிய கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.     இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலர் எம். பிரபாகர்  கூறியதாவது: இத்திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சிகளில் கழிவு பொருள்களை சேகரித்து மக்கும், மக்காத குப்பையென தரம் பிரித்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றும் தொட்டிகள் அமைக்கப்படும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 150 குடும்பங்களுக்கு ஒரு தூய்மை தொண்டர்கள் என்கிற அடிப்படையில் 760 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.      இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிக்கும் தூய்மை பணிக்காக  ரூ.35 ஆயிரம் ஒதுக்கப்படும். அதையடுத்து மூன்று சக்கர வாகனம், பிளாஸ்டிக் கழிவுகளை நறுக்கும் இயந்திரங்கள், சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள், தூய்மை தொண்டர்களுக்கு மேல்சட்டை, கையுறைகள், அடையாள அட்டை, தொப்பி ஆகியவை வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.