விருதுநகரில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்


விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி திங்கள்கிழமை முதல், தொடர்ந்து 25-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இத்தேர்வில் விருதுநகர், அருப்புக்கேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 335 பள்ளிகளில் இருந்து 30,170 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது. இப்பணியில் 600 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் மற்றும் இவர்களுக்கு உதவியாக அமைச்சுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல், இம்மாவட்டத்தில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
இப்பணியில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 1800 முதுகலை பட்டதாரி ஆசியர்களுடன், தலைமையாசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி முடியும் வரையில் முன்னறிவிப்பு இல்லாமல் விடுமுறை எடுக்க கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...