வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

விருது நகரில் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம்

சீனப்பட்டாசுகளை ஊடுருவச்செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:12 am

எஸ். பாண்டியன்

சீனப்பட்டாசுகளை ஊடுருவச்செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த உண்ணாவிரதப்போராட்டத்தை தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழாகரன் தொடங்கி வைத்தார்.இதில், 3 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் சீனப்பட்டாசுகளை ஊடுருவச் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி பட்டாசுக்கான கருந்திரி தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் மொத்தம் 10 பெண்கள் உள்பட 60 தொழிலாளர்கள் வரையில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.