ஆட்டோ ஓட்டுநர் கொலைச்சம்பவம்: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
சாத்தூர் நீதிமன்றத்தில் மதுரை ஆட்டோ ஓட்டுநர் கொலைச் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை ஒருவர் சரண் அடைந்தார்.


சாத்தூர் நீதிமன்றத்தில் மதுரை ஆட்டோ ஓட்டுநர் கொலைச் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை ஒருவர் சரண் அடைந்தார்.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முனியசாமி. இவர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மதுரை தெப்பக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொலைச்சம்பவம் தொடர்பாக மதுரை முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்த ராஜபாண்டியின் மகன் கண்ணன்(21) என்பவர் சாத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நீதிபதி மாரியப்பன் முன்னிலையில் சரண் அடைந்தார். அதையடுத்து, விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...