வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

விருதுநகர் அருகே வாகன விபத்தில் மின் நிலைய தொழிலாளி சாவு

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தனியார் சிமெண்ட்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தனியார் சிமெண்ட் பாக்டரியின் மின் நிலைய தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதலியார்பட்டியைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரின் மகன் குற்றாலிங்கம்(24). இவர் விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் தனியார் சிமெண்ட் பாக்டரியில் உள்ள மின் நிலையத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு உடன் பணியாற்றும் மணிகண்டன் என்பவரின் இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொண்டு ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுவிட்டு மின்நிலையத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, முக்குச்சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் குற்றாலிங்கம் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடன் வேலைபார்க்கும் பணியாளர் செந்திலதிபன்(39) வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு: விருதுநகர் பாவாலி சாலையை அடுத்த கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணனின் மகன் அண்ணாத்துரை(39). இவரிடம் இதே பகுதியில் பவித்ரா நகரைச் சேர்ந்த அற்புதராஜ்(35) என்பவர் ரூ.75 ஆயிரம் கடன் பெற்றிருந்தாராம். இதையடுத்து கொடுத்த பணத்தை கேட்டதற்கு திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்தாராம். அதையடுத்து, இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் அற்புதராஜ் மீது நடவடிக்கை எடுக்கும் படி மனுத்தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற அண்ணாத்துரையை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். இது குறித்து அவர் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் அற்புதராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.