மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவர் கைது: 4 பேர் மீது வழக்கு
விருதுநகர் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இது


விருதுநகர் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே முத்தால்நகரைச் சேர்ந்தவர் சுகன்யா(27). இவருக்கும் அருகில் உள்ள கருப்பசாமி நகரைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் சசிக்குமாருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடைபெற்றதாம். அப்போது, 25 சவரன் நகையும், ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான சீர்வரிசை பொருள்களும் வழங்கப்பட்டதாம். இந்நிலையில், மேலும் 15 சரவன் நகை கூடுதலாக வரதட்சணையாக கேட்டு மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்தாராம். இந்நிலையில் குழந்தை பெறுவதற்காக தந்தை வீட்டிற்கு தங்கி இருந்துள்ளார்.
அதையடுத்து குழந்தையை பார்க்க வந்த கணவர் குடும்பத்தினர் நகை கொண்டு வந்தால் தான் வாழமுடியும் தகராறு செய்து சென்றார்களாம். இதையடுத்து தனது கணவருக்கும் வனிதா என்பவருக்கும் 2-வது திருமணம் நடைபெற்றுள்ளதாக உறவினர்கல் தெரிவித்துள்ளனர். இதை தட்டிக் கேட்பதற்காக சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கு அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
உடனே இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் சசிக்குமாரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மாமனார் சௌந்தரபாண்டியன், மாமியார் அண்ணபூர்னம் உறவினர்களான சசிகலா, சுகப்பிரியா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...