தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே வாகனத்தில் கடத்திய 2 ஆயிரம் கருந்திரி கட்டுக்கள் பறிமுதல்: இளைஞர் கைது

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்தப்பட்ட 2 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக இளைஞர் ஒருவரையும் கைது

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:08 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்தப்பட்ட 2 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.

விருதுநகரை அடுத்த கன்னிசேரி-முதலிப்பட்டி சாலையில் எவ்வித அனுமதியில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை வாகனத்தில் கடத்திச் செல்வதாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமை காலையில் குறிப்பிட்ட சாலையில் வாகனத்தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலை வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உள்ளே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் 2 ஆயிரம் கருந்திரி கட்டுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்தவர்  ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(25) என்பதும், ஒண்டிப்புலியில் உள்ள ரபீக் நடத்தி வரும் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

உடனே வாகனத்துடன் கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் என்பவரை கைது செய்தனர். மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர் ரபீக், முகவர் குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.