பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

லாரி மீது வேன்மோதல்: மூன்று வயது குழந்தை சாவு: 8 பேர் காயம்

கரூரில் சனிக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் மூன்று வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் 8 பேர் காயமைடந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:08 am

ஏ. அருள்ராஜ்

கரூரில் சனிக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் மூன்று வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் 8 பேர் காயமைடந்தனர்.

நாமக்கல் மாவட்டம் நல்லூர் அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிவேல்(30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த வியாழக்கிழமை ராமேஸ்வரத்திற்கு வேனில் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிடச் சென்றுள்ளார். வேனை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(29) ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு சாமி கும்பிட்டுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு நாமக்கல் புறப்பட்டனர்.

வேன் கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கரூர் வெங்கமேடு மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதி, சென்டர் மீடியனில் ஏறி நின்றது. இதில் படுகாயமைடந்த பழனிவேலின் மூன்று வயது மகள் இளமதி சம்பவ இடத்திலே இறந்தது. மேலும் காயமடைந்த பழனிவேலின் மனைவி எழிலரசி(28), பழனிவேலின் தந்தை பெருமாள்(65), தாய் கண்ணாயி(58), அண்ணன் தேவராஜன்(40), இவரது மனைவி கஸ்தூரி(32), உறவினர் சேகர் மகன் சக்திவேல்(9) ஆகியோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.