தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் கோயில் திருவிழா தகராறில் போலீஸார் தாக்கியதாக புகார்: 10 பேர் காயம்

விருதுநகரில் கோயில் திருவிழா தகராறில் போலீஸார்கள் தாக்கியதாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இச்சம்வத்தில் வழக்குரைஞர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் கோயில் திருவிழா தகராறில் போலீஸார்கள் தாக்கியதாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இச்சம்வத்தில் வழக்குரைஞர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதில், நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் ஏராளமானோர் அக்னிசட்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் அய்யனார்நகரைச் சேர்ந்த வழக்குரைஞர்  ராமலிங்கத்தின் உறவினர் அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, திருக்கோயில் வளாகம் முன்பு கூட்டநெரிசலாக இருந்ததால்  மேலதாளத்துடன் ஆடி சென்றார்களாம்.

அப்போது, அந்தக்கும்பலில் வந்த ராமலிங்கத்தை காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி கையை பிடித்து ஓரமாக நிற்கும் படி  கூறினாராம். அதற்கு, ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து டி.எஸ்.பியை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ், பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராமநாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் ஆகியோருக்கும், வழக்குரைஞர் தரப்பைச் சேர்ந்தோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார் தாக்கியும் உள்ளனர்.

இதில், வழக்குரைஞர் ராமலிங்கம்(27), நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முத்துச்சாமி(42), சங்கர்(25), சங்கரநாராயணன்(46), ராஜா(32), மணிகண்டன்(18), வெங்கடேஷ்(22), முத்து(21), குமாரவேலு(32) மற்றும் முத்தையா(20) உள்ளிட்டோர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்குரைஞர் ராமலிங்கம் மேற்கு காவல் நிலையத்தில்   டி.எஸ்.பி.சக்கரவர்த்தி, காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் ஆகிய 14 பேர் மீது புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.