காவிரியாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்கக் கோரி ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் ஆளோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணையைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது,. திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வே. துரைமாணிக்கம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு விவசாயச் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் ம. சுப்பிரமணி, சி. மாசிலாமணி தலைமை வகித்தனர்.
மாவட்டச் செயலர்கள் அயிலை சிவசூரியன், வி.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் க.சுரேஷ், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

