விருதுநகரில் பங்குனிப் பொங்கல் திருவிழாவில் 450 போலீஸார் பாதுகாப்பு
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனிப் பொங்கல் திருவிழாவில் அசம்பாவித சம்பவஙகளை தடுக்கும் வகையில் 450 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,


விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனிப் பொங்கல் திருவிழாவில் அசம்பாவித சம்பவஙகளை தடுக்கும் வகையில் 450 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், திருவிழாவின் அனைத்து நடவடிக்கைகளையும் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட வட்டாரப் பகுதி கிராமங்களில் பங்குனி பொங்கல் திருவிழா தொடங்கியுள்ளது. அதில், விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் முக்கிய திருவிழா நிகழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பொங்கல் வைத்தலும், 6-ம் தேதி முதல் இருந்து 7-ம் தேதி காலை வரையில் அக்னிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், தோரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திருவிழாவைக் காண விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவார்கள்.
எனவே இப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கூட்டத்தில் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் நகரின் 42 முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சுற்றியுள்ள பிரச்னைக்குரிய கிராமங்களில் 2 பேர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் மற்றும் நகையை வழிப்பறி செய்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் கோவிலை சுற்றி 4 திசைகளிலும் சாதாரண உடையில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.
அதேபோல், திருக்கோயில் வளாகம் மற்றும் நகரின் முக்கிய பகுதியில் சி.சி.டி.வி கேமரா பொறுத்தப்பட்டு திருவிழாவின் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர் மற்றும் கிராமங்களில் பிரச்னை ஏற்பட்டால் உடனே கட்டுப்படுத்த சார்பு ஆய்வாளர் தலைமையில் 5 பேர் வீதம் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, தலா 1 வாகனமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதையடுத்து, பஜார், பாவாலி சாலை, பர்மா காலனி, கச்சேரி சாலை, நகராட்சி சாலை, அல்லம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பதற்காக 2 குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...