லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பண்ருட்டி அடகுக்கடையில் கொள்ளை

பண்ருட்டியில் நகை அடக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Updated On :13 செப்டம்பர் 2014, 6:25 am

பண்ருட்டியில் நகை அடக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில் அருகே வசிக்கும் கோத்தம் ராஜ் ஜெயின் என்பவர் தன் வீட்டின் முன் பகுதியில் உள்ள நகை அடகுக்கடை வைத்துள்ளார்.

கடந்த வியாழன் இரவு அன்று மர்ம நபர்கள் சிலர் அந்த கடையின் பூட்டை வெல்டர் மிஷின் வைத்து உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அரை கிலோ வெள்ளி, 2 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 50 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும் லாக்கரை திறக்க முடியாததால் அடகு வைக்கப்பட்டிருந்த  பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின. பண்ருட்டி நகரின் மையப்பகுதியில்  உள்ள ஒரு கடையில் நடந்த இந்த திருட்டுச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.