மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் பிரச்னைக்கு இன்று தீர்வு

சேலம் மாநகராட்சியின் 21 வார்டுகளில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வரும் தாற்காலிக துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தீர்வு எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Updated On :12 செப்டம்பர் 2014, 2:24 am

சேலம் மாநகராட்சியின் 21 வார்டுகளில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வரும் தாற்காலிக துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தீர்வு எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 மாநகராட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள 21 வார்டுகளில் தாற்காலிகப் பணியாளர்களாக உள்ள சுமார் 680 துப்புரவுத் தொழிலாளர்களும் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதையடுத்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய 16 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்தை வியாழக்கிழமை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

 அதில், சேலம் மாவட்ட அரசிதழில் தாற்காலிக தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூ.165 ஆக இருப்பதை ரூ.246 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இப்போது தனியார் நிறுவனம் தங்களுக்கு ரூ.211 வரை தர முன் வந்துள்ளது. அதை ரூ.246 ஆக உயர்த்தி வழங்கினால் எங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தினசரி ரூ.246 ஊதியம் வழங்கினால் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, மற்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதனால் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு வெள்ளிக்கிழமை முடிவு எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.