தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தீவிரம்: தொடர் மழையால் நெடுஞ்சாலைத்துறையினர் அவதி

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தீவிரம்: தொடர் மழையால் நெடுஞ்சாலைத்துறையினர் அவதிபோடி,

Updated On :21 அக்டோபர் 2014, 5:54 am

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகள் அகற்றும் பணி தீவிரம்: தொடர் மழையால் நெடுஞ்சாலைத்துறையினர் அவதிபோடி,

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையினால் பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.     போடிமெட்டு மலைச்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் பல இடங்களில் பாறை, மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. திங்கள் கிழமை மாலை 5-வது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் ஏற்பட்ட பாறைகள் சரிவினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.     மேலும் 2-வது கொண்டை ஊசி வளைவில் சாலையின் தடுப்புச் சுவர் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இச்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதன் கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார்.      இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றும் பணியில் செவ்வாய் கிழமை காலை முதலே ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இச்சாலையில் காலை முதலே தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதால் சாலை சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.      மேலும் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிய தொடங்கியுள்ளன. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் திண்டாடி வருகின்றனர். செவ்வாய் கிழமை பிற்பகலுக்குள் சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.