தேவாரம் ஓடைகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேகரிக்க வேண்டும் என தேவாரம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள தேவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை, கரும்பு, கப்பை கிழங்கு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தேவாரம் முதல் கோம்பை வரை உள்ள பகுதி மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்பட்டு வரும் பகுதி. வறட்சியான பகுதியும் ஆகும்.
இப்பகுதியில் நிலவும் வறட்சியை போக்கவே 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. 18-ம் கால்வாயில் திறக்கும் தண்ணீரை கொண்டு கண்மாய்களை நிரப்பி அதன் மூலம் விவசாயம் செய்வது வழக்கம். அதேபோல் தேவாரம் முதல் கோம்பை வரை உள்ள மலைப் பகுதிகளில் மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் வருவது வழக்கம். இந்த தண்ணீரும் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது பல ஊர்களில் பெய்து வரும் மழை தேவாரம் பகுதியில் இல்லாததாலும், 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்காததாலும் தேவாரம் பகுதி மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். எனவே இப்பகுதி வறட்சியை போக்க 18-ம் கால்வாயில் வழக்கமாக திறக்கும் தண்ணீரை உடனே திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல் மலைப் பகுதியில் மழைக்காலங்களில் ஓடைகளில் வரும் தண்ணீரை தேக்க ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டினால் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. விவசாயத்துறை, விவசாய பொறியியல் துறை, பொதுப்பணித்துறை ஆகியவை உரிய நடவடிக்கை எடுத்து ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க செயலர் திருப்பதிவாசகன் கூறுகையில், இந்த ஆண்டு 18-ம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கவில்லை, மழையும் இல்லை இதனால் விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கினால் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்துக்கொள்வோம்.
அதற்காக 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதோடு, மலை பகுதி ஓடைகளில் தடுப்பணை கட்ட வேண்டும், இதுகுறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

