கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண் கொலை: லாரி டிரைவர் கைது

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:57 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் சாமியார் கிணற்றுத் தெருவைச் சேர்ந்த ராமரின் மனைவி லட்சுமி(34). இவருக்கு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், இவரது மகள் ரம்யா அதே பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மகன் இப்பகுதி பள்ளியில் படித்து வருகிறார். தற்போது, விடுமுறை என்பதால் மகனும், மகளும் லட்சுமியின் சொந்த ஊரன வத்தலக்குண்டு அருகே ராமையாபட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் லட்சுமி மட்டும் வீட்டில் தனியார் இருந்தாராம்.

எனவே கடந்த இரண்டு நாள்களாக கதவை மூடிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் விரைந்து வந்து வீட்டை திறந்த பார்த்தனர். அங்கு லட்சுமி கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாராம். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்ததில், லாரி டிரைவர் ஒருவர் வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரித்ததில் மதுரை அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஈஸ்வரன்(38) என்பவர் தான் வந்து செல்வதாக தெரியவந்தது. உடனே அக்கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்ற போலீஸார் அவரை  கைது செய்தனர். மேலும், அவரிடம் கொலைக்கான காரணம் குறி்த்து தீவிராக விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.