மனிதச்சங்கிலி போராட்டம்: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் தேசபந்து மைதானத்திலிருந்து, பஜார் மற்றும் தெப்பம் வரையில் விருதுநகர் ஒன்றியத் தலைவர் கி.கலாநிதி தலைமையில், நகரச் செயலாளர் நயினார் முகமது முன்னிலையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும 250 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர். பின்னர் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.