பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு முதல் பிரேத பரிசோதனை வரையில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் பட்டியலிட்டு லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கும்பகோண்ம் சாலையில் இயங்கி வரும் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பண்ருட்டி நகரைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்த ஏழை மற்றும் பாமர மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், உள் நோயாளிகளாக 100க்கும் மேற்பட்டவர்கள் சிசிச்சை பெற்று வருகின்றனர். சிக்சிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலர் லஞ்சமாக பணம் கேட்டு பெறுவதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக டோக்கன் போட ரூ5 ஊசி போட ரூ`10 வயிற்றுப் போக்கு வாந்தி தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ50 முதல் ரூ 100 வரையிலும் உள் நோயாளைகளாக அனுமதிகப்படுவர்களிடம் ( சீட்டு போட) ரூ 10ம் ஆண் குழந்தை பிறந்தால் 1000 ரூ பெண் குழந்தை பிறந்தால் ரூ500 பிரேத பரிசோதனைக்கு ரூ.2000க்கும் மேல் என தொகை நிர்ணயித்துள்ளனர்.
பணம் கொடுக்க மறுப்பவர்களுக்கு கால தாமதம் செய்தல் மற்றும் முறையான கவனிப்பு இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிசை பெற முடியாமல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பண்ருட்டி அரசுப் பொதுமருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் 13 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ர் விடுப்பு மற்றும் மாறுதல் காரணமாக சென்றவர்கள் போக பணியில் 5 பேர் மட்டுமே உள்ளனர்.
வைரஸ் காய்ச்சல் சிக்சக்ன் குனியா, டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் நோயாளிகள் நீண்ட வரையில் காத்திருக்கின்றனர். உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதியுறுகின்றனர் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

