மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

News image
Updated On :13 நவம்பர் 2014, 5:16 am

திருநெல்வேலி : கோஷ்டி மோதலில் 2 பேர் பலி; மூன்றடைப்பு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பானாங்குளம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட வெட்டியது. இந்த சம்பவத்தில் வேலுச்சாமி என்பவர் நள்ளிரவு உயிரிழந்தார்.

இந்த கும்பலால் தாக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த மாரி என்கிற மாரிக்கனி என்பவரது தலையில்லாத சடலம் இன்று காலை 7 மணிக்கு மீட்கப்பட்டது. படுகாயம் அடைந்த கணேசன் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை கும்பலிடம் இருந்து ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார். அவரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்தைக் கண்டித்து திருநெல்வேலி மூன்றடைப்பு பிரதான சாலையில் பானாங்குளம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றாவளிகளை பிடித்து கைது செய்யவும், கிராமத்தில் தொடரந்து இதுபோன்ற கோஷ்டி மோதல்கள் நடைபெறாமல் தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.