அதன் அடிப்படையில் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த மருதமுத்துவின் மகள் அங்காளபரமேஸ்வரி(17), உறவினரான சிவகாசியைச் சேர்ந்த டிரைவர் சரவணன்(24)என்பவருக்கும் வருகிற 8.6.2014ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பெரிபேராளியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவரின் மகள் ஸ்ரீராணி(17), விருதுநகர் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த உறவினரான சி.ஆர்.பி.எப் போலீஸாக பணிபுரிந்து வரும் ராஜேஸ்கண்ணனுக்கும் வருகிற 9.6.2014லும், பெரியபேராளியைச் சேர்ந்த அழகர்சாமியின் மகள் பிரபாவதி(16)-க்கும், உறவினரான கோவையில் டிரைவராக பணிபுரிந்து வரும் பாண்டியராஜன்(24) என்பவருக்கும் வருகிற 8.6.2014லும், திருச்சுழி அருகே பொம்மக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜனின் மகள் பவதாரணி(15) என்பவருக்கும் மதுரை புளியம்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கும் வருகிற 8.6.2014லும் திருமணம் நடைபெற இருக்கிற விவரம் தெரியவந்தது.