மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தொடக்க கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.17 லட்சம் மோசடி: முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது

லாலாப்பேட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.17 லட்சம் மோசடி செய்த, சங்கத்தின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில்

Updated On :25 மே 2014, 10:03 am

லாலாப்பேட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.17 லட்சம் மோசடி செய்த, சங்கத்தின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள திம்மாட்சிபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலி ஆவணம் தயாரித்து சிலர் மோசடி செய்வதாக குளித்தலை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வங்கியில் கணக்கினை ஆய்வு செய்த போது, 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, வங்கியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகக் கூறி கடனும், ஏற்கனவே கடன் வழங்கியவருக்கு மீண்டு கடன் கொடுத்தது உள்ளிட்டவைத் தொடர்பாக ரூ.2லட்சத்து 17 ஆயிரத்து 69 மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடியை வங்கியின் முன்னாள் செயலாளர் வாங்கலைச் சேர்ந்த கார்த்திக்(31), உறுப்பினர்கள் குளித்தலை ஐநூற்றிமங்கலம் கே.பேட்டையைச் சேர்ந்த சந்திரமோகன்(50), வீரவள்ளியைச் சேர்ந்த விஸ்வநாதன்(51), மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் சரக மேற்பார்வையாளர் நச்சலூரைச் சேர்ந்த சிதம்பரம்(60) மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி தாத்தையாங்கர்பேட்டை பிள்ளாத்துறையைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஆர்.பாலசுப்ரமணியன்(60) ஆகியோர் சேர்ந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாலமுருகன் சேலம் வணிக குற்றப்புலனாய்வு போலீஸில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் கரூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் சீனிவாசன்  மற்றும் போலீஸார் சனிக்கிழமை இரவு கார்த்திக் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.