தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

விருதுநகரில் மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை  பட்டப்பகலில் உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:21 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை  பட்டப்பகலில் உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(48). இவர் தனது மகன் செந்தில்குமாரை வீட்டில் இருக்க வைத்து விட்டு மனைவி, மகளுடன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மதுரைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றாராம். இதையடுத்து அவரது மகன் வீட்டை பாதுகாத்து வந்துள்ளார். அதேபோல், சனிக்கிழமை காலையில் இருந்து பிற்பகல் 2 மணிவரையில் வீட்டில் இருந்துள்ளார். அதையடுத்து வீட்டை பூட்டி விட்டு அடுத்த தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மதியம் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். பின் அங்கிருந்து 3 மணிக்கு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கேட்டு மற்றும் கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 25 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மதுரையில் இருக்கும் சிவசங்கரனுக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சிவசங்கரன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.