தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சேலம் மாநகராட்சியில் இன்று குறை கேட்பு கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On :20 மே 2014, 2:51 am

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

 இது குறித்து மாநகராட்சி ஆணையர் க.இரா.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சேலம் மாநகரில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை கேட்புக் கூட்டங்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 இந்நிலையில், தேர்தல் முடிவடைந்து நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வாராந்திர குறை கேட்பு கூட்டத்தை மாநகராட்சி அலுவலகத்தில் 20-ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 எனவே மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட பொதுமக்கள், தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி, மாநகர மேயரிடம் வழங்கி, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று க.இரா.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.