2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டயர் வெடித்து லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி சாவு

விருதுநகரில் கார் டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பால் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் உயர் நீதிமன்ற பெண் அலுவலர், கணவருடன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:14 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் கார் டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பால் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் உயர் நீதிமன்ற பெண் அலுவலர், கணவருடன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை பாடியில் குடியிருந்து வருபவர் ஞானதாஸ்(56). இவர் புரசைவாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஞானசுகிர்தம்(54). இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் மகன் அபிஷேக்(18), அஸ்வின்(14) ஆகியோர் நாகர்கோவில் அருகே உள்ள சொந்த கிராமமான கருங்கல்லில் உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் அவர்களது உறவினர் ஜான் சசிக்குமாரும் வந்துள்ளார். அப்போது, அதிகாலையில் 6.30 மணியளவில் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 4 வழிச்சாலை பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென முன்புறம் டயர் வெடித்தது. இதில் கார் நிலைகுலைந்ததோடு, கட்டுப்பாட்டையும் இழந்து எதிரே வள்ளியூர் நோக்கி பால் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த ஞானதாஸ் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ஞானசுகிர்தம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவர்களது மகன் அபிஷேக், அஸ்வின் மற்றும் உறவினர் ஜான் சகிக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து விரைந்த வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஜான் சசிக்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.