2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 18-ம் தேதி மறைமுக தேர்தல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிக்கும் வருகிற 18-ம் தேதி அந்தந்த

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:13 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிக்கும் வருகிற 18-ம் தேதி அந்தந்த உள்ளாட்சி அலுவலகத்தில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு, குறிப்பிட்ட நாளில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கோட்டநத்தம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கொங்கன்குளம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மறைக்குளம் ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட நாளில் காலை 9.30 மணிக்கு நடைபெற இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.