டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கடன் வாங்கி தருவதாக மகளிர் சுயஉதவிக் குழுவினரிடம் மோசடி: 8 பேர் மீது வழக்குப்பதிவு

கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடிப் புகாரில் சென்னை,தஞ்சையைச் சேர்ந்த அரசு ஊழியர், பேராசிரியர் உள்ளிட்ட 8 பேர் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிந்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:13 am

ஜெயப்பாண்டி

கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடிப் புகாரில் சென்னை,தஞ்சையைச் சேர்ந்த அரசு ஊழியர், பேராசிரியர் உள்ளிட்ட 8 பேர் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

 மதுரை வைகை வடகரையைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் மல்லிகை மகளிர்குழு மற்றும் தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். இவரிடம் தஞ்சை சூரக்குடியைச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர் வனிதா உள்ளிட்டோர் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.30 லட்சம் மற்றும் ரூ.20 லட்சத்துக்கான சொத்துப் பத்திரங்கள், சுயஉதவிக்குழு அடையாள அட்டை, ஆவணங்களை அளிக்கவும் கூறியுள்ளனர்.

 அதனடிப்படையில் புதுப்பட்டி வைகை, புதூர் மல்லிகை, ஆழ்வார்புரம் முத்து, ஹார்விபட்டி ரோஜா, மகாளிபட்டி அங்கையர்கண்ணி ஆகிய சுய உதவிக்குழுக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2012 ஆம் ஆண்டில் பல தவணைகளாக வனிதா வங்கிக் கணக்கிலும், அவரது உறவினர்களிடமும் ரூ.30 லட்சம் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்டபடி கடன் வாங்கித்தராததுடன், குழு ஆவணங்களையும் திருப்பித்தரவில்லையாம்.

இதுதொடர்பாக ரேவதி அளித்த புகாரின்பேரில், சூரக்குடிபட்டி சத்துணவுப் பணியாளர் வனிதா, அவரது சகோதரர் சுந்தராஜன், பேராசிரியர் கெüதம், லால்குடி மணி, சென்னை எண்ணூர் பகுதி கிரேசி என்ற மேரிகிரேசி, வசந்தகுமாரி, சிசிலி, முத்தமிழ்செல்வன் ஆகியோர் மீது மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

  மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.