விருதுநகர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சாவு
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியைச் சேர்ந்த ராஜாக்கனியின் மகன் மஞ்சூர் அலி(33). இவர் மதுரையில் இருந்து சாத்தூருக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றார். அந்த லாரியில் ஜெயங்கொண்டத்தைச்


விருதுநகர் அருகே வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழந்த விபத்தில் ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியைச் சேர்ந்த ராஜாக்கனியின் மகன் மஞ்சூர் அலி(33). இவர் மதுரையில் இருந்து சாத்தூருக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றார். அந்த லாரியில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்தகுமார்(20) என்பவர் கிளீனராகவும் இருந்தார்.அப்போது, விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் புல்லலக்கோட்டை பாலம் அருகே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தடுப்பில் மோதி கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், தூக்கிவீசப்பட்ட மஞ்சூர்அலி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக கிளீனர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...