மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

 கரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்ததில் கரும்பு வெட்டும் தொழிலாளிகள் 2 பேர் சாவு

கரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்ததில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.

Updated On :31 மார்ச் 2014, 7:43 am

கரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்ததில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வடமலையனூரைச் சேர்ந்தவர்கள் அய்யனார்(22), குமார்(17). இவர்கள் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் தங்கி அங்கு கரும்பு வெட்டும் தொழிóல் செய்துவந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3மணியளவில் புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்ல டிராக்டர் வந்துள்ளது. அந்த டிராக்டரை அய்யனாரும், குமாரும் எடுத்து பின்னால் நோக்கி நகர்த்தியுள்ளனர். அப்போது இருளில் கிணறு இருப்பது தெரியாமல் பின்னோக்கிச் சென்றதில் டிராக்டருடன் இருவரும் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலே கிணற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுதொடர்பாக வெள்ளியணை போலீஸர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.