பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது வலசை கிராமத்தில், 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ் ஊராட்சியின் தலைவர் பதவி பொது பிரிவினருக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு


ஊராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிட பிரிவினருக்கு ஒதுக்ககோரி கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது வலசை கிராமத்தில், 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ் ஊராட்சியின் தலைவர் பதவி பொது பிரிவினருக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இப்பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடத்திலும் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்த அறிவிப்பு தட்டிகளை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...