முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 17-ம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அதிகாலை 4.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாhத்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்பாடு நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று, திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு வைத்து திருக்கல்யாணம் நடைபெறுகிறது.