மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரசி பறிமுதல்

மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, பணியாளர்கள் ஜான்பிரைட், விஜயகுமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை புதுக்கடை அருகே

Updated On :28 ஜூன் 2014, 10:55 am

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, பணியாளர்கள் ஜான்பிரைட், விஜயகுமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை புதுக்கடை அருகே வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்தினர். தொடர்ந்து காரை மங்காடு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து காரை சோதனையிட்டபோது, அதில் 750 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடிவிட்டார். காரையும், ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.