பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வுக்கான முன்னேற்பாடு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:41 am

எஸ். பாண்டியன்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு வருகிற 29ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மாவட்டத்திலிருந்து தேர்வு எழுதுவதற்காக 20863 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், விருதுநகர் 6 மையங்களில் 4426 பேரும், அருப்புக்கோட்டையில் 8 மையங்களில் 4393 பேரும், ராஜபாளையத்தில் 9 மையங்களில் 4395 பேரும், சிவகாசியில் 11 மையங்களில் 4091 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9 மையங்களில் 3558 பேரும் என 43 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வு மையங்களை கண்காணிப்பதற்காக 72 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், துணை வட்டாட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே தேர்வாளர்கள் அனைவரும் எளிதாக தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் அரசு போக்குயவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் கீழ்த்தளங்களிலேயே அறைகள் ஒதுக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து வினாத்தாள் மையத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் வீடியோ மூலம் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார், காவல் துணைக்கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கருவூல அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் வாசு, மின்வாரியத்துறை மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயலதா, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.