மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாயனூர் அருகே கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வினிதா(17). இவர் கரூர் வீரராக்கியத்தில் உள்ள கொசுவலை கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார்.

Updated On :24 ஜூன் 2014, 9:50 am

மாயனூர் அருகே வெற்றிலை கொடிக்கால் தோட்டத்திற்குள் திங்கள்கிழமை இரவு இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வினிதா(17). இவர் கரூர் வீரராக்கியத்தில் உள்ள கொசுவலை கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். வழக்கம்போல திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்றவர் இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வராததால், பொன்னுசாமி, கொசுவலை நிறுவனத்துக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது கொசுவலைக்கம்பெனியினர் வழக்கம்போல வினிதா வேலை முடிந்த பிறகுச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.இதையடுத்து பொன்னுசாமி அவரது உறவினர்கள் வீடுகளில் தேடினார். அப்போதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சித்திலவாய்-பிச்சம்பட்டி சாலையில் உள்ள வெற்றிலைக் கொடிக்கால் தோட்டத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குச் சென்று பார்த்தபோது வினிதா, ஆடைகள் களைந்த நிலையிலும், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் சடலமாகக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாயனூர் போலீஸார் மற்றும் குளித்தலை துணைக் கண்காணிப்பாளர் ஜமீம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்த பெண் கற்பழித்துக்கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை காலை திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ராமசுப்ரமணியும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.